×

பல்கேரியாவில் கடும் பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை முடக்கம்: போக்குவரத்து பாதிப்பு, 1000 வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு

சோபியா: பல்கேரியாவில் நிலவும் கடும் பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. பல்கேரியாவில் கடந்த சில நாட்களாகவே பனிபொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளது. வர்ணா, வேலிஹோ உள்ளிட்ட பகுதிகளில் 36செ.மீ. முதல் 40செ.மீ. அளவிற்கு பனிப்பொழிவு உள்ளது. சோபியா பகுதிகளில் 30செ.மீ. அளவிற்கு பானிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. சாலைகள் முழுவதும் பனிக்கட்டிகள் நிரம்பியுள்ளதால் போக்குவரத்துகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பலவேறு சாலைகள் மூடப்பட்டுள்ளன.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மேலும், ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நேற்று வானிலை நிலைய அதிகாரி எச்சரிக்கை விடுத்திருந்தனர். கடும் பனிப்பொழிவும் சூறைக்காற்றும் நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பல்கேரிய தலைநகர் சோபியாவுடன் மோன்டானாயை இணைக்கும் ஒரே பாதையான பெட்ரோஹன் பாஸ் பகுதியில் சாலைப் போக்குவரத்து கடும் நெரிசலை சந்தித்தது. தலைநகர் சோபியாவில் பனிப்பொழிவால் சில் மரங்களும் சாலைகளில் சாய்ந்து கிடந்தன. மேலும், சாலைகளில் குவிந்துள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

The post பல்கேரியாவில் கடும் பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை முடக்கம்: போக்குவரத்து பாதிப்பு, 1000 வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Bulgaria ,Sofia ,Dinakaran ,
× RELATED இத்தாலியன் ஓபன் 3வது சுற்றில் சோபியா